சென்னை:
கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 19 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியிலும் இதே நாளில் தேர்தல் நடைபெற உள்ளது.