ஆரணி:

டைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ஆரணி தொகுதியில் மட்டும் தபால் வாக்குகள் போட்ட அரசு ஊழியர்களின் வாக்குகள் 1010 வாக்குகள் செல்லாத வாக்காக மாறி உள்ளன.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் லட்சணம் மீண்டும் அம்பலமாகி உள்ளது.

கடந்த தபால் வாக்குகள் தொடர்பாக அரசு ஊழியர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், தபால் வாக்கு விண்ணப்ப படிவங்களை சரியான முறையில் நிரப்பாததால், 12915 அரசு ஊழியர்கள், ஆசிரியர் களின்  தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஆரணி தொகுதியில் மட்டும் 1010 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இங்கு பதிவான  மொத்த தபால்வாக்குகள் 7,692. இதில் 1784 முன்னாள் ராணுவத்தினரும், 5908 அரசுஊழியர்களும் அடங்குவர் .

இதில், காங்கிரசுக்குகு 4370 பேரும்,  அதிமுகவிற்கு 1660  பேரும், நாம் தமிழருக்கு 258 பேரும், மக்கள் நீதி மையத்திற்கு 96பேரும், அமமுக சுயேச்சைக்கு 57 பேரும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 55 பேரும் வாக்களித்துள்ளனர். மேலும் ,தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 26 தபால் வாக்குகளும், , ஆன்டி கரப்ஷன் பார்ட்டிக்கு 16வாக்குகளும், இதர சுயேச்சைகளுக்கு 42 வாக்குகளும் போடப்பட் டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தவிர நோட்டாவிற்கு 102 பேரும் வாக்களித்துள்ளனர்.

இத்துடன் செல்லாத வாக்குகள் விவரமும் வெளியாகி உள்ளது. தபால் ஓட்டுக்கள் செலுத்திய  அரசு ஊழியர்களின் 5908 பேரில் 1010 பேர் தங்களது வாக்கினை, அதற்குரிய படிவங்களை சரியான முறையில் நிரப்ப தெரியாமல், தவறுதலாக பதிவிட்டு செல்லாத ஓட்டாக்கி உள்ளனர். ஒரு தொகுதியில் மட்டுமே இந்த அளவுக்கு செல்லாத வாக்குகள் பதிவாகி இருப்பதால், மற்ற தொகுதிகளிலும் இதுபோன்றே செல்லாத வாக்குகள் பதிவாகி இருக்கும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே இவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பது குறித்து பயிற்சி கொடுக்கப்பட்டும், தங்களது வாக்குகளை சரியான முறையில் செலுத்த தெரியாத இவர்களை என்ன செய்வது, மற்றவர்களுக்கு வாக்குகளை எப்படி செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு அளிக்க வேண்டிய அரசு ஊழியர்கள் தங்களது வாக்கினை செலுத்த கூடிய அளவுக்குகூட தகுதி இல்லாதவர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.