சென்னை

று அறிவிப்ப்ய் வரும் வரையில் தர்காலிகமாக அரக்கோணம் = சேலம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

”ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் பூரி ரத யாத்திரைக்காக 12 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில் பெட்டி கொண்டு செல்லப்பட உள்ளது. இதன் காரணமாக, அரக்கோணம்-சேலம் பயணிகள் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளது.

அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் பயணிகள் ரயிலும் (வண்டி எண்.16087), மறுமார்க்கமாக, சேலத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரயிலும் (16088) ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் நேற்று (23-ந்தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

என அறிவிக்கப்பட்டுள்ளது

[youtube-feed feed=1]