ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார்.
இசைப் புயலின் இந்த திடீர் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது :
30ம் ஆண்டு திருமண பந்தத்தை எட்டுவோம் என நம்பி இருந்ததாகவும், ஆனால், அனைத்தும் எதிர்பாராத முடிவுகளாகி விட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
உடைந்த துண்டுகளை மீண்டும் அதே இடத்தில் சேர்த்து வைக்க முடியாது என விவகாரத்து குறித்து ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தனது இந்த அறிவிப்பை அடுத்து தன்னை தனிமையில் இருக்க அனுமதிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.