
அஜித் நடிப்பில் வெளியான தினா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ்.
அதன் பின் பல சூப்பர்ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
ஆனால் அவர் இயக்குனராகும் முன்னதாகவே ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து உள்ளதாக கூறி அந்த மலரும் நினைவுகளின் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’பூச்சூடவா’ திரைப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நாகேஷ் மற்றும் சிம்ரன் நடித்துள்ள அந்த காட்சியில் சர்வராக தோன்றும் ஏ.ஆர்.முருகதாஸ், நாகேஷ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
[youtube-feed feed=1]