சென்னை: ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, நாளை  தமிழகம் முழுவதும்  கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வருடத்திற்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாளை  சிறப்பு கிராம சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது தொடர்பான ஆலோசனைகளை முக்கிய கருப்பொருளாக விவாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சி காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள்  கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்போமே, கிராம மக்களுக்கம் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே. அதிகாரத்தைப் பரவலாக்கி, மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானதாக மாற்றம் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள். அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை ந டத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது. பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.

அதன்படி,  தற்போது, வறுமை ஒழிப்பு, பட்டினி இல்லாத நிலை,  அனைவருக்கும் கல்வி ஆகிய 3 இலக்குகளில் ஊரக வளர்ச்சித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இலக்குகளில் அடைவதற்கான குழுவின் தலைவராக ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் உள்ளார். இவரின் கண்காணிப்பில் இந்த இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம், 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திர ஊரக குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்ய யோஜானா போன்ற திட்டங்கள்  உள்ள நிலையில், இந்த திட்டங்களின் மூலம்  இலக்குகளை அடைய செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழகத்தில் நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களின் கிராம் நீடித்த நிலையான வளர்ச்சி நோக்கி சென்று கொண்டு உள்ளதா அல்லது அதை செயல்படுத்துவதில் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும். ஒவ்வொருவரும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு, உங்களது பகுதி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள்.