பணி நியமனம் செய்யப்பட்ட நேரடி எஸ்.ஐ.க்களுக்கு பயிற்சி வகுப்பு!

சென்னை,

மிழக காவல் துறையில் பயிற்சி முடித்த காவலர்கள் சென்னை மாநகர பகுதிகளில் பணியில் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த வகுப்பை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

தமிழக காவல்துறையில் தேர்வு செய்யப்பட்ட 244 ஆண் மற்றும் பெண் காவலர்கள் சென்னை காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வழக்கின் தன்மைகள், குற்றவாளிகளை பிடிக்கும் முறைகள் பற்றி 3 நாள் பயிற்சி வகுப்புகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கியது.

இந்த பயிற்சி வகுப்பை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராம், சேஷசாய் மற்றும் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் கலந்து கொண்டு புதிதாக பதவியேற்றுள்ள உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
English Summary
appointed sub-inspector's 3 days Training Class! Commissioner inagurated