சென்னை:
மிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், புதிய எந்திரம் ஒன்றை வாங்கி இருக்கிறது.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியன்று முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் பரவிவந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதா உடல்நலம் பெற்றுவருவதாக அறிக்கைகள் வெளியிட்டு வந்தது.
04-1475550754-jayalalitha-hospitalized46567
மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பிரிட்டனில் இருந்து ரிச்சர்டு ஜான் என்ற நுரையீரல் மற்றும் இதர உடல்உறுப்புகளுக்கான சிகிச்சை நிபுணரை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வரவழைத்தது. அவர், அடிக்கடி வருகை தந்து, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.
தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் வித்யாசாகர் ராவ், திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.,ஸ்டாலின், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாஜக., தலைவர் அமித் ஷா உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று, நலம் விசாரித்து வந்தனர். .
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு சில பிசியோதெரபி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை கூறிவருகிறது. எனினும், இந்த பயிற்சிகளை முழுமையாக அளிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளித்தால், நோய்த்தொற்று அதிகரிக்கக் கூடிய சூழல் உள்ளது என்பதால், ஜெ.,வுக்கு பிசியோதெரபி பயிற்சிகள் அளிப்பதற்காக, அப்போலோ நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது.
, மனிதர்கள் உதவி இல்லாமலேயே இந்த எந்திரம் மூலம்  பிசியோதெரபி பயிற்சி அளிக்க முடியும். இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் இருந்தாலே போதும். ஆனால் இந்த எந்திரத்தை இயக்குவது குறித்து தெரியாமல் அப்போலோ மருத்துவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதுபற்றி பயிற்சி அளிப்பதற்காக, சிங்கப்பூரில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று, தற்போது சென்னை வந்துள்ளது.
இந்த சிங்கப்பூர் டாக்டர்கள் குழுவை, குறிப்பிட்ட எந்திரத்தை தயாரித்த நிறுவனமே, அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.