விசாகப்பட்டணம், 
ந்திர மாநிலம் விசாரகப்பட்டினத்தில் போட்டோ ஸ்டுடியோவில்  போலி 2000 ரூபாய் நோட்டு களை அச்சடித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு புதியதாக வெளியிட்டுள்ள பிங்க் கலரிலான 2000 ரூபாய் நோட்டு போலவே நாடு முழுவதும் ஆங்காங்கே கள்ளநோட்டு அச்சடிப்பதும், கைது செய்யப்பட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது.
ஆந்திரா மாநிலம் விசாரகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விசாகப்பட்டணத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த மூன்று பேர் கொண்ட கும்பலில் சத்யநாராயணன், யுகாந்தர் என்ற  இரண்டு பேரை அரிலோவா போலீசார் கைது செய்து உள்ளனர். மற்றொருவரான யல்லாஜி என்பவர் தலைமறைவானார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இவர்கள் ஸ்டுடியோவில் கலர் பிரிண்டிங் மெஷின் வைத்து  ரூபாய் நோட்டுக்கள் அடிக்க திட்டமிட்டு உள்ளனர். அதன் முன்னோட்டமாக குறைந்த அளவு நோட்டுக்களே பிரிண்ட் செய்து உள்ளனர்.
ஒரிஜினல் நோட்டு மாதிரியே  தரமான காகிதங்களை வாங்கி ரூபாய் நோட்டுகளை பிரிண்டிங் செய்து உள்ளனர்.
இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை முதன்முதலாக ஒரு பெட்ரோல் பங்கில் கொடுத்து, டேங்ஙக முழுவதும் பெட்ரோல் போட்டுள்ளனர். ஆனால், துரதிருஷ்டவசமாக, பெட்ரோல் போடுபவர் நோட்டு மீது சந்தேகம் கொண்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் நடத்தி வந்த ஸ்டூடியோவில் போலியாக ரூபாய் நோட்டுகள் அச்சடித்தது தெரியவந்தது.
போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Also read