பனாஜி, கோவா:
காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  எதிர்வரும் கேவா தேர்தலில்,  37 வேட்பாளர்களில் 36 பேரைக் கட்சி அறிவித்துள்ளதாகவும், அந்த கடைசி தொகுதிக்கான பெயரை விரைவில் அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.
நான் காங்கிரஸ் கட்சியில் மிகவும் தாழ்மையான பதவியை வகிக்கிறேன். காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்  என்றும் தெரிவித்துள்ளார்.
கோவாவில் 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களில் 15 பேர் பாஜக ஆட்சியின் போது மற்ற கட்சிகளுக்குத் தாவினர்.
கோவாவில் 40 சட்டப் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் (BJP) முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸும் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாகவே இருக்கின்றன.  அவை தீவிரமான, பலமுனைப் போரை நடத்துவதற்கு முயற்சிக்கின்றன.
இந்நிலையில், காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  சிதம்பரம் தெரிவித்துள்ளார்.