சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட மாபெரும் கூட்டம் கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இன்று  மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை சந்திக்க  பிரபல  ரேடியோ ஜாக்கி வந்தார். அவர் மாணவர்களிடம் கலந்துரையாடி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் என்றால், அதற்காக இப்படி ஒன்று சேர்ந்து போராடுவது நம் ஒற்றுமையின் அடையாளம் என்றார்.

இனி எந்த பிரச்னையாக இருந்தாலும் வீதிக்கு வந்து போராடுவோம். விவசாயி தற்கொலை, கல்விக்கொள்ளை என்று எந்த பிரச்னை என்றாலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள்.

இனியும் தமிழன் ஏமாற மாட்டான்

என்று ஆர்.ஜே. பாலாஜி கூறினார்.