ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சைலன்ஸ்’.
கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே சைலன்ஸ் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது .
அதை தொடர்ந்து தற்போது படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது. இந்த ப்ரோமோவில் நடிகை அஞ்சலி காவல் அதிகாரியாக தோன்றியுள்ளார். அனுஷ்காவிடம் கேள்வி மீது கேள்வி கேட்டு விசாரனை செய்து வருகிறார். சோனாலி எங்கே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ப்ரோமோவை பார்க்கையில், ஷாலினி பாண்டே தான் அநேகமாக சோனாலியாக இருக்கக்கூடும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.