மகேஷ்பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படம் “சர்காருவாரி பேடா”.
பரசுராம் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது.
தமன் இசை அமைக்கிறார்.
மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இயக்குநர் பரசுராம், தனது டவிட்டர் பக்கத்தில், “சர்காருவாரி பேடா” படத்தில் வங்கி மேலாளராக அனுஷ்கா நடிக்கிறார் என பதிவிட்டிருந்தார்.
“அவருக்கு இந்தப்படத்தில் பிரதான வேடம்” என்றும் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை பார்த்து அனுஷ்கா அதிர்ந்தாரோ இல்லையோ, டைரக்டர் பரசுராம் அதிர்ந்து போனார்.
காரணம்?
அந்த ட்விட்டர் பதிவை அவர் வெளியிடவில்லை. பரசுராம் பெயரில் யாரோ அனாமதேய பேர்வழி போலி ட்விட்டர் கணக்கை தொடங்கி, இந்த வதந்தியை பரப்பியுள்ளார்.
படக்குழுவினர் “எங்கள் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக வெளியான செய்தி உண்மை அல்ல” என விளக்கம் தெரிவித்துள்ளனர்.
– பா. பாரதி