ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் அந்த ஆண்டில் அதிகம் சாதித்தவர்கள் யார் போன்ற கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த ஈகிள் ஐ பத்திரிகை ஆசியாவில் உள்ள செக்ஸியான ஆண் மற்றும் பெண்கள் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

செக்ஸியஸ்ட் ஆண்கள் பட்டியலில் நடிகர் கிருத்திக் ரோஷன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

செக்ஸியஸ்ட் பெண்கள் பட்டியலில் முதல் இடத்தில் ஆலியா பட், 2-வது இடத்தில் தீபிகா படுகோன், 3-வது இடத்தில் ஹினா கான், 6-வதாக கத்ரீனா ஃகைப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இப்பட்டியலில் முதல்முறையாக நடிகை அனுஷ்கா ஷெட்டி 22-வது இடத்தைப் பிடித்துள்ளார் .