
‘தன்ஹாஜி’ இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் ‘ஆதிபுருஷ்’.
பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.
இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது.
ஆதிபுருஷ்’ படத்தின் கதை ராமாயணத்தை முன்வைத்துத் தான் உருவாகிறது என்பதை இயக்குநர் நாக் அஸ்வின் உறுதிப்படுத்தியுள்ளார்.
ராவணனை அடிப்படையாக கொண்டு ‘லங்கேஷ்’ எனும் வேடத்தில் சைஃப் அலிகான் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பெரிய பட்ஜெட்டான இந்த திரைப்படத்தில் சீதாவாக நடிக்க அனுஷ்கா சர்மா இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
அனுஷ்கா ஷர்மா தனது பிரசவத்திற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குள் படப்பிடிப்பு பணிகளை தொடங்க தயாராக இருப்பதாக கூறுகிறது. அதன்படி பிரபாஸ், சைஃப் அலிகான் படப்பிடிப்பு காட்சிகள் முதலில் நடக்கலாம் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]