ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் இதன் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை அமேசான் ப்ரைம் நிறுவனம், நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு கைப்பற்றி வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கிலிருந்து முதல் படமாக ‘நிசப்தம்’ படத்தைக் கைப்பற்றியுள்ளது அமேசான். அனுஷ்கா நடித்துள்ள படம் என்பதால், ஆந்திரா – தெலங்கானா திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

[youtube-feed feed=1]