மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தமிழில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான கொடி திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.
இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும், நடிகர் நிகில் சித்தார்த்தும் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான 18 PAGES காதல் ரொமான்டிக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்திற்கு சுகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுத இயக்குனர் பல்நடி சூர்யா பிரதாப் இயக்குகிறார். இத்திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்தின் GA2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
முன்னணி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.