கோல்டன் குளோப் விருதுபெற்ற இத்தாலிய அமெரிக்க நடிகர் ஆன்டோனியா ஷபாடோ கொரோனாவால் மரணம்..

Must read

கோல்டன் குளோப் விருதுபெற்ற இத்தாலிய அமெரிக்க  நடிகர் ஆன்டோனியா ஷபாடோ கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். இதை அவரது மகன் ஜூனியர் ஷபாடோ தெரிவித்து உள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஆன்டோனியா ஷபாடோ ( வயது 77) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், எனினும் வயது மூப்பு காரணமாகவும், கொரோனா தொற்று காரணமாகவும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை அவரது மகனும் நடிகருமான  ஜூனியர் ஆன்டோனியா ஷபாடோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு,  தந்தை மறைந்ததை உறுப்படுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வே தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆன்டோனியா ஷபாடோ  1966ஆம் ஆண்டு வெளியான கிராண்ட் பிரிக்ஸ் படத்தில் நடித்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதற்காக அவருக்கு  கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. மேலும் இப்படம் மூலம் பிரபலமான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.

மேலும் Joey, CSI: NY, Castle உள்ளிட்ட பல வெப்சிரிஸ்களிடம் ஆண்டனியோ ஷபாடோ நடித்துள்ளார்.

More articles

Latest article