பன்றி இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட புதிய கலவையைக் கொண்டு எலிகளின் வயதை மாற்றியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு மனிதர்களின் வயது முதிர்வை தவிர்க்க பெருமளவு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.*

மனிதர்களின் வயது முதிர்வை தவிர்க்க 70 சதவீதம் அளவுக்கு உதவியாக இருக்கும் இந்த ஆய்வின் அடுத்த கட்டத்தில் 80 வயது முதிர்ந்த மனிதரை 26 வயது இளைஞராக தோற்றம் பெற வைக்க முடியும் என்று உறுதிபட கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் காலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்து ஜெரோ சயின்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது.

ஒரு இளம் பன்றியின் இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட E5 என்று அழைக்கப்படும் வயது முதிர்வை தவிர்க்கும் சிகிச்சை உருவாக்கப்பட்டது.

வயதான எலிகளுக்கு செலுத்தப்பட்ட இந்த E5 கலவை வயதை 70 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பன்றி இரத்த சிகிச்சையை பல்வேறு எலி திசுக்களுக்குப் பயன்படுத்தியபோது, அது இரத்தம், இதயம் மற்றும் கல்லீரலின் உயிரியல் வயதை மாற்றியமைத்ததாக அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

சிகிச்சை இன்னும் மனித சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றாலும், மனிதர்களின் வயது முதிர்வை தவிர்க்க நம்பிக்கைக்கு இடம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.