இப்போது சமூக வலைதளங்களில் பிக்பாஸ் பற்றித்தான் பதிவுகள் மிக அதிகமாக இருக்கின்றன. அதுவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ஜூலியை விமர்சித்துத்தான் நெட்டிசன்கள் பலர் பதிவிட்டுவருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு கோசம் போட்டிருந்தார் இந்த ஜூலி. இதையடுத்து “ஜல்லிக்கட்டு போராளி”, “தமிழ்ப் போராளி” என்றும் பலர் இவரை அழைக்க ஆரம்பித்தனர்.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதியது யார் என்ற கேள்விக்கு, தாயுமானவர் என பதிலளித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
தவிர நிகழ்ச்சியில் பங்குகொண்டிருக்கும் காயத்ரி ரகுராம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டியதின் அவசியம் குறித்து கேட்டபோதும் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
இதையடுத்து, “தன்னை தமிழ்ப் போராளி என்று சொல்லிக்கொள்ளும் ஜூலிக்கு தான் ஏன் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டோம் என்பதே ஜூலிக்கு தெரியவில்லையே” என்று விமர்சிக்க ஆரம்பித்தனர்.
மேலும், “இதுவரை தான் கேமரா முன் நடித்ததே இல்லை” என்று அவ்வப்போது கூறிவருகிறார் ஜூலி.
ஆனால் ஜூலி இதற்கு முன்பு விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கிறார் என்பதையும், கிறிஸ்தவ மத டிவி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார் என்பதையும் ஆதாரங்களோடு வீடீயோக்களை பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
“போராளி ஜூலி, விஜே ஜூலி, ஆக்ட்ரஸ் ஜூலி, ஆங்கர் ஜூலி, நர்ஸ் ஜூலி – யப்பா டேய்ய், இது கமல விட அதிக கெட்டப்ப போட்டிருக்கு” என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
இப்போது ஜூலி பற்றி இன்னொரு அதிர்ச்சி தகவல் சமூகலைதளங்களில் உலா வர ஆரம்பித்திருக்கிறது.
நொடிக்கு நூறு முறை தான் ஒரு நர்ஸ் எனறு ஜூலி சொல்லி வருகிறார் அல்லவா?
ஆனால் அவர் நர்ஸே இல்லையாம்.
நர்ஸ் ஆக வேண்டுமென்றால் அதற்கென படித்திருக்க வேண்டும். அதாவது டிப்ளமோ இன் நர்சிங், பேச்சிலர் ஆப் நர்சிங் என்று.
ஆனால் ஜூலியோ, பள்ளி நாட்களில் இருந்து தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். மற்றபடி நர்ஸிங் படிப்பு ஏதும் படிக்கவில்லையாம்.
“ஆக… ஜூலியின் அடுத்த பொய்யும் கலைந்துவிட்டது” என்று விமர்சிக்கிறார்கள் நெட்டிசன்கள்.
“பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களில் நான் மட்டும்தான் நடிகை இல்லை” என்றும் அடிக்கடி கூறி வருகிறார் ஜூலி. ஆனால் அங்கே நடிப்பவர்களிலேயே பெரிய நடிகையாய் ஜூலிதான் இருப்பார் போல!