விருதுநகர்: விருதுநகரில் மேலும் ஒரு பாலியல் சம்பவம்  நடைபெற்றுள்ளது. சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்ததாக  திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது குற்றம் சாட்டி, அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் 22வயது தலித் இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துவந்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 2 திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் 2 பேர்  உடன் 4 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது மேலும் ஒரு பாலியல் சம்பவம்  திமுக ஊராட்சி தலைவர் மகன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம்  இருக்கங்குடி கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த செந்தாமரை. இவரது மகன் சுலைமான். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த 16வயது மாணவியை காதலிப்பதாக கூறி, அந்த பெண்ணுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்து பாலியல் சில்மிஷம் செய்துவந்துள்ளார்.

இதையறிந்த  அதேசிறுமியின் தாய் தெய்வானை, மகன் ராஜா ஆகியோர், அந்த சிறுமியிடம்இருந்து பறித்து சுலைமானிடம் கொடுத்து எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால், சுலைமான் குடும்பத்தினர் அ 7 பேர் செர்ந்து சிறுமியின் தாயையும், சகோதரனையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய், காவல்நிலையத்தில், சுலைமான் மற்றும் அவரது  தாய் செந்தாமரை உள்பட 7 பேர் புகாரி கூறியதுடன், சுலைமான் தனது மகளை பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில்,  சுலைமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியை சந்திக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்கு அனுமதி கிடைக்காத நிலையில்,  தெய்வானையும் அவரது மகனும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது திடீரென தெய்வானைக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைகண்ட பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி வலிப்பு ஏற்பட்ட பெண்ணை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.