சீனாவில் கொரோனா வைரசால் இன்னொரு சிக்கல் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று குணமாகி திரும்பியவர் மரணம்

Must read

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுதும்  பலருக்கும் இத்தொற்று பரவி வரும் நிலையில் சீனாவில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமாகிச் சென்றவர் 5 வது நாளிலேயே மரணம் அடைந்துள்ளது புதிய சிக்கலை கொடுக்கிறது. ஏனெனில் பலரையும் சிகிச்சைக்கு உட்படுத்தி குணப்படுத்திய நிலையில் இச்சிக்கல் வைரஸ் தொற்றின் வீரியத்தினை நமக்குத் தெரிவிக்கிறது

லீ லியாங் எனும் 36 வயது ஆண் ஒருவர்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 14 நாட்களுக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார் . ஆனால் வீட்டிற்கு வந்த இரண்டாவது நாளிலேயே அவருக்கு சுவாச தொந்தரவு அதிகமாகி இருந்தது. அதோடு அவருக்கு  வாய் உலர்ந்தது போன்றும் வாய்வுக்கோளாறு இருந்ததாகவும் அந்த பிரச்னையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சுவாசக்கோளாறால் மரணமடைந்தார்

ககொரோனா வைரஸ் தாக்குதலில் சிகிச்சைப்பெற்று குணமாகி திரும்பியவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்படுவதால் கோவிட் -19 நோயாளிகளுக்கான புனர்வாழ்வு சிறப்பு மருத்துவமனை வுஹானில் உள்ள பாரம்பரிய சீன மருத்துவத்தின் ஹூபே மாகாண மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

-செல்வமுரளி

 

More articles

Latest article