டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில அதிர்வின் மையமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 50 கிமீ ஆழத்தில் இருந்துள்ளது. புகுஷிமா மற்றும் மியாகி எல்லைப்பகுதிகளில் இந்த நில அதிர்வானது 4 புள்ளிகள் வரை உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக நிலநடுக்கம் பதிவானது. முன்னதாக நேற்று இரவு புகுஷிமா பகுதியில் 7.1 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட, அதன் காரணமாக 140 பேர் காயமடைந்தனர்.
இந்த அதிர்வானது தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டது. 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், அதன் எதிரொலியாக சுனாமியும் உருவானது. அப்போது புகுஷிமா அணு உலைகள் முழுவதும் சீர்குலைந்தது, குறிப்பிடத்தக்கது.