லண்டன்: அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், உலகின் மிகவும் பிரபலமான பதின்ம வயது நபர் என்ற மற்றொரு கவுரவமும் மலாலா யூசுப்பை தேடி வந்துள்ளது.
ஐ.நா. அமைப்பு இந்த கவுரவத்தை மலாலாவுக்கு அளித்துள்ளது. மேலும், மலாலா ஐ.நா. அமைதி தூதர் என்ற பொறுப்பிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஐ.நா. அமைப்பின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது, “கடந்த 2012ம் ஆண்டு பெண் கல்வியில் மும்முரம் காட்டியதற்காக பயங்கரவாதிகளின் துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளானார் மலாலா. பின்னர், வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்து, தனது பணியைத் துவக்கினார்.
இதனையடுத்து 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது அவரின் தொடர் உழைப்பின் மூலம் உலகின் மிகவும் பிரபலமான பதின்ம வயது நபராக உருவாகியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.