மதுரை:
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மகனுடன் நீட் தேர்வு எழுத கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்ற போது திடீரென உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து மதுரை தனியார் கல்லூரிக்கு நீட் தேர்வு எழுத மகளை அழைத்து சென்றுவிட்டு திரும்பியபோது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த கண்ணன் என்பவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார்.
தேர்வு முடிந்து மகள் தேவி ஐஸ்வர்யாவிடம் நெஞ்சுவலிப்பதாக கண்ணன் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.