புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து பரவ ஆரம்பித்துள்ளது.


 

மாவட்டத்தில் நேற்று வரை 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 535 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் 281 பேர் சிகிச்சையில் உள்ளனர். 206 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இறப்பு எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

[youtube-feed feed=1]