சென்னை:
மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 10 மணி வரையில் சென்னையில் இன்று மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 லிருந்து 2,34,114 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,575 ஆக அதிகரித் துள்ளது. சென்னையில் இதுவரை 82,764 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 12,735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2076 ஆக உள்ள நிலையில், நேற்று மாலை முதல் இன்று காலை வரை மேலும் 21 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel