சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய  நிலையில்,  2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட்   மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பட்ஜெட்டில், சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி உள்பட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டு வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை  பட்ஜெட் அமர்வு இன்று காலை தொடங்கியது. முதல்நாள் அமர்வான இன்று வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும்,  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார். திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் வாசித்த அமைச்சர்,   பட்ஜெட் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி என்று கூறியவர்,   “தமிழகம்  கல்வி, சுகாதாரம் வேளாண்மை, தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது”,  ஏழை எளிய மக்களுக்காக குடியிருப்புகள் உருவாக்க தனி வாரியம் உருவாக்கியவர் கருணாநிதி என்று கூறியவதுடன், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்  மதிய, காலை உணவு திட்டங்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன என்றார்.

இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரை

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ளும் வயதில் இளைஞர்களின் திறன் மேம்பாடு, மாவட்டங்களில் பன்முகப்பட்ட தொழில் வளர்ச்சியை உருவாக்குதல், பண்ணை இயந்திரமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சில பகுதிகள் என்று பட்டியலிட்டார். பொருளாதார சவால்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் சமாளிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சியை அதிகரிப்பதற்கான கொள்கை நடவடிக்கைகளில் பட்ஜெட் கவனம் செலுத்தும்.

இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறியவர்,  தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் நிதிநிலை அறிக்கை  தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு.

100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.

ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்

அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்

 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு  செய்யப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு

பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்‘

அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 நூல்கள் மொழிபெயர்க்கப்படும்

சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.

புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்,

மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்துவருகிறது. இதற்கேற்ற, குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது.

சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும்.

சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்

இவ்வாறு கூறினார்.