டெல்லி: நாட்டில் உள்ள மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக, 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
அதேவேளையில், 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி (GVA) 7.3 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. 21.97 லட்சம் கோடியாக (ரூ. 20.47 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது என்று சமீபத்திய ஆண்டுத் தொழில் ஆய்வு (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. ASI அறிக்கையின்படி, 2022-23க்கான தொழில்துறை உற்பத்தி 21 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் குறித்த வருடாந்தர மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. அதில் உற்பத்தி துறையில் பங்களிக்கும் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன், வேலை வாய்ப்பு மூலதன உருவாக்கம் போன்றவற்றின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி (GVA) 7.3 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. 21.97 லட்சம் கோடியாக (ரூ. 20.47 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது தொழில் ஆய்வு (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. ஏஎஸ்ஐ அறிக்கையின்படி, 2022-23க்கான தொழில்துறை உற்பத்தி 21 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) திங்கள்கிழமை வெளியிட்ட தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) 2022-23 இன் முடிவுகளின்படி, உற்பத்தித் துறையில் அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ASI இன் படி, இந்தியா முழுவதும் 1,84,94,962 நபர்கள் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளனர், இதில் அதிகபட்சமாக 15% வேலைவாய்ப்புகளை வழங்கி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது.
மேலும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாகவும், அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலமாகவும் தமிழ்நாடு முதலிடம் வகிக்குகிறது.
இந்தியாவில் மொத்தமுள்ள சுமார் 2 லட்சத்து 53 ஆயிரம் தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக குஜராத்தில் 31ஆயிரம் தொழிற்சாலைகளும், மராட்டியத்தில் சுமார் 26 ஆயிரம் தொழிற்சாலைகளும் உள்ளன. உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தொழிற்சாலைகளில் அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்களிலும் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 85 லட்சம் வேலை வாய்ப்புகளில் தமிழ்நாட்டில் மட்டும் 15 விழுக்காடு அதாவது சுமார் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்து உள்ள மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களில் சுமார் 23 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.