சென்னை: தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆண்டிறுதி தேர்வுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், ரம்ஜான் பண்டிகையையொட்டி, 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை மாற்றி அறிவித்தது.
தற்போது மீண்டும் 4 to 9 வகுப்புகளுக்கான தேர்வு தேதிகளை மாற்றி உள்ளது. அதன்படி, அறிவியல் சமூக அறிவியல் தேதிகளில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
ஆண்டு இறுதி தேர்வு தேதிகளையே முறையாக அறிவிக்க முடியாத திமுக அரசு, பள்ளிக்கல்வித்துறையை சீரழித்து வருவதாகவும், துக்ளக் ஆட்சி போல செயல்படுவதாகவும் பொதுமக்களும், கல்வியாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு /அரசு உதவிபெறும்/ தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ம் தேதிக்கும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி தேர்வுகளை நடத்தி அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை அனைத்து பள்ளிகளுக்குமாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.