ஸ்ரீநகர்: அமா்நாத் யாத்திரை ஜூன் 28ம் தேதி தொடங்கி ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 22ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தலைமையில் அமா்நாத் கோயில் வாரியத்தின் 40வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அமா்நாத் யாத்திரை வரும் ஜூன் 28ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக ரக்ஷா பந்தன் தினத்தன்று யாத்திரை நிறைவுபெறும். அதனை பின்பற்றி இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 22ம் தேதி யாத்திரை நிறைவு செய்யவும் முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கும். 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு காஷ்மீா் வங்கி, யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகளில் பக்தா்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு துறவிகளுக்கு மட்டும் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.