கொழும்பு,

லங்கையில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 10ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு குழப்பம் மற்றும் ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவு போன்றவற்றால் தேர்தல் அறிவிப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 10ந்தேதி உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இலங்கை அரசின் புதிய தேர்தல் சட்டத்தின்படி உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை 8,825 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இதில் 25 சதவீதம் பெண் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக இந்த சட்டம் வர இருக்கும் தேர்தல் மூலம் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது