2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு… அஜித், மோகன்லால், நாகார்ஜுனா உள்பட தேர்வானவர்கள் விவரம்…

Must read

சென்னை:  2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழ்கத்தில் இருந்து அஜித்குமார், மலையாளத்தில் இருந்து  மோகன்லால் ஆந்திராவில் இருந்து நாகார்ஜுனா உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய  ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான (2020)  தாதா சாகேப் பால்கே விருது தென்னிந்திய மாநிலங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  அதன்படி,  தமிழ் திரையுலகில் நடிகர்கள் அஜித்குமார், தனுஷ், பார்த்திபவன், நடிகை ஜோதிகா, இசையமைப்பாளர் அனிருத் உள்பட பலருக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்திரையுலகில்,  சிறந்த படமாக செழியன் இயக்கிய டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடித்த தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித்குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
ராட்சசி படத்தில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.
சிறந்த இயக்குனருக்கான விருதை ஒத்தச் செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத் ரவிச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் விருதுபெறுபவர்கள்:
பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் விருது- நாகார்ஜுனா
சிறந்த நடிகர்: நவீன் பாலிஷெட்டி (முகவர் சாய் சீனிவாச ஆத்ரேயா)
சிறந்த நடிகை: ரஷ்மிகா மந்தண்ணா (அன்புள்ள தோழர்)
சிறந்த இயக்குனர்: சுஜீத் (சாஹோ)
 சிறந்த படம்:ஜெர்சி
சிறந்த இசை இயக்குனர்: எஸ் தமன்
மலையாள திரையுலகில் விருதுபெறுபவர்கள்:
பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் விருது- மோகன்லால்
சிறந்த நடிகர்: சூரஜ் வெஞ்சராமுடு (அண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25) 
சிறந்த நடிகை: பார்வதி திருவொத்து (உயாரே) 
சிறந்த இயக்குனர்: மது சி நாராயணன் (கும்பலங்கி நைட்ஸ்)
 சிறந்த படம்: உயாரே 
சிறந்த இசை இயக்குனர்: தீபக் தேவ்
கன்னட திரையுலகில் விருதுபெறுபவர்கள்:
பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் விருது- சிவ்ராஜ்குமார்
சிறந்த நடிகர்: ரக்ஷித் ஷெட்டி (அவனே ஸ்ரீநாம்நாராயணா)
சிறந்த நடிகை: தான்யா ஹோப் (யஜமனா)
சிறந்த இயக்குனர்: ரமேஷ் இந்திரா (பிரீமியர் பத்மினி)
 சிறந்த படம்:முகாஜ்ஜியா கனசுகலு
சிறந்த இசை இயக்குனர்: வி ஹரிகிருஷ்.

More articles

Latest article