திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலின் கருவறையை வீடியோ எடுத்து பரப்பிய நபர்கள் மீது புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 29ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. அதில் கோவில் கருவறையில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அன்றைய தினம் பரணி தீபத்தை ஏராளமான பக்தர்கள், கோவில் ஊழியர்கள்,  அரசியல் கட்சியினர் என பலரும் தரிசனம் செய்தனர். அப்போது சிலர் கருவறை மண்டபத்தில் பரணி தீபத்தை செல்போனில் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்தனர். பின்னர் இதனை சமூக வலை தளங்களில் பரப்பினர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் கருவறை காட்சியை படம் பிடித்து சமூக வலை தளங்களில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அந்த காட்சியை நீக்கம் செய்யவும் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்க முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.