தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது திமுக ஆட்சியை அகற்றும் வரை தான் செருப்பு அணியப்போவதில்லை என்று தெரிவித்தார்.
இனி வழக்கமான அரசியல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்த அவர், நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து முருகனிடம் முறையிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக அரசைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு தனக்கு தானே சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிர்பயா நிதி ஒதுக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நாட்டில் அரசியல் கட்சிக்கு மரியாதை இல்லை என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சியை அகற்றும் வரை தான் செருப்பு அணியப்போவதில்லை என்று கூறிய அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் தனது காலனியை கழற்றினார்.