சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,  உத்தரவை திரும்ப பெற ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1928-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 95 ஆண்டுகால பழமையான ,  தமிழகத்தின் ஒரு தொன்மையான பல்கலைக்கழக திகழ்ந்து வருகிறது. மொழி, அறிவியல், கலை என அனைத்துப் பிரிவுகளிலும் தலைச் சிறந்த ஆய்வறிஞர்களை உருவாக்கி, உலகம் முழுவதும் அவர்கள் பரவிச் சென்று சாதனை படைத்து வருகின்றனர்.

இவ்வளவு சிறப்புமிக்க அண்ணாமலை பல்கலைக்கழகம்,  இணைவேந்தரின் திறமையின்மை காரணத்தால்,  தவறான நிர்வாகம், ஊழல், மிகைப்பணி நியமனம், தவறான நிதி மேலாண்மை மற்றும் பல காரணங்களால் நலிவுற்று சிக்கி சீரழிந்து வருகிறது. கடந்த  . 2012-ம் ஆண்டில் வரலாறு காணாத நிதிச் சிக்கலில் சிக்கிதால், அங்கு பணியாற்றும்,  ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் மற்றும் மாணவர்கள் பெரும் துயருக்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து , அந்த பல்கலைக்கழகம்,  சில மாதங்களுக்கு முன் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டன.

பின்னர் அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு பேராசிரியர்கள் உள்பட மொத்தம்  1,390   பேர் மியாக உள்ளதாகவும், அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றம் உத்தரவிடப்பட்டது ஏற்கெனவே நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் பல்கலைக்கழகம் இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்று அங்கிருப்பவர்களே கூறி வருகின்றனர். பணி மாறுதல், அயற்பணியிட மாறுதல், உயர்பதவி நியமனங்கள் உள்ளிட்ட பலவிதங்களில் பல்கலைக்கழக நிர்வாகத்தில் தொடர்ந்து ஊழல் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இநத் நிலையில்,  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மிகையாக உள்ள பேராசிரியர்கள் உள்பட 1,390 பேர் பிற துறைகளுக்கு பணிநிரவல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசின்   உத்தரவை திரும்ப பெற ஆசிரியரல்லா பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.