சென்னை

ரும் அக்டோபர் 3 ஆம் தேதி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக . மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதையொட்டி பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் சரமாரியாக வார்த்தைப் போர் நிகழ்த்தி வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களில் இந்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் மிகவும் தாக்கி பேசு வருவது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சென்னையில் உள்ள பாஜக. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 3-ந்தேதி கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.