பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்துக்கு அனபெல் சேதுபதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நாயகனாகவும், வில்லனாகவும் நடிக்கிறார். அதேபோல் டாப்ஸி. இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் நடிக்கிறார். இவர்கள் இருவரும் முதல்முறையாக அனபெல் சேதுபதி என்ற படத்தில் இணைகிறார்கள்.

இதுவொரு ஹாரர் காமெடி படம். இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, தாப்ஸி இருவருக்குமே இரண்டு வேடங்கள். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப்பின் எடிட்டிங் பணி செய்ய, பாளரா கிஷோரை படத்திற்கு இசையமத்துள்ளார்.

இந்தப் படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் 17-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கலகலப்பான இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.