பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு அனபெல் சேதுபதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதியுடன் இணைந்து டாப்ஸீ, ராதிகா சரத்குமார், யோகிபாபு, தேவதர்ஷினி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, தாப்ஸி இருவருக்குமே இரண்டு வேடங்கள். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப்பின் எடிட்டிங் பணி செய்ய, பாளரா கிஷோரை படத்திற்கு இசையமத்துள்ளார்.
இந்தப் படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அடுத்த மாதம் 17-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடலான கோஸ்ட் பார்ட்டி பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.