சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சிவாவின் கல்லூரிகால நண்பரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். “விஸ்வாசம்” படத்திற்காக தேசியவிருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று, தலைவா படங்களில் வில்லனாக நடித்த நடிகர் அபிமன்யூ சிங், அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 25 அன்று கொரோனா, நுரையீரல் செயலிழப்பு காரணமாக மரணமடைந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இறப்பதற்கு சில நாட்கள் முன் அண்ணாத்த படத்திற்காக, இமான் இசையில் ரஜினியின் துவக்க பாடலை பாடி கொடுத்துள்ளார்.இந்த பாடல் அக்டோபர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இரண்டாவது பாடலான சாரக்காற்றே என்ற பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நயன்தாராவுடன் இருக்கும் புதிய போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]