தர்பார் படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தடைபட்டது.
ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் கொரோனா தொற்று பரவுவது குறையாத நிலையில் அது குறைந்த பிறகு படப் பிடிப்பு தொடங்கும்படி கூறி வருகிறார். படப் பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தாலும் கொரோனாவால் படப்பிடிப்பில் பங்கேற்கும் தொழிலாளர்கள் டெக்னீஷியன்களுக்கு பாதிக்கப் படக்கூடது என தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி தர வேண்டும் என்று பட தயார்ப்பா ளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி தரலாம் என மத்திய தகவல் தொடர்பு துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பரில் படப் பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கும் என்று கூறப் படுகிறது.
ஒருவேளை படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத் தாலும் கொரோனா முற்றிலும் முடிவடிந்த பின்னரே ரஜினிகாந்த படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று கூறபடுகிறது. அதன்படி படப்பிடிப்பை தொடங்க வேண்டுமென்று இயக்குனரிடம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியா கிறது. எனவே படப்பிடிப்பு உடனடி யாக தொடங்கும் பட்சத்தில் ரஜினி இல்லாமல் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.
படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி கிடைத்த பிறகுதான் அண்ணாத்த படப்பிடிப்பின் ஷெட்யூல் முடிவாகும் என்று தெரிகிறது.