சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
பல இடங்களில் ரசிகர்கள் மழை என்றும் பாராமல், உற்சாகமாக வெடி வைத்து கொண்டாடினார்கள். பேனர், தாளம், நடனம் ஆடி படத்தை வரவேற்று இருக்கிறார்கள்.
தொன்றுதொட்டு தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த அண்ணன் – தங்கை சென்டிமென்டையே நம்பி இந்தத் தீபாவளிக்கு வெளியாகியிருக்கிறது ரஜினிகாந்த்தின் அண்ணாத்த.
உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் தமிழகத்தில் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக திரைக்கு வந்துள்ளது.