சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் 11ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், அரசு இல்லத்தை காலி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் ரூ.280 கோடி அளவில் ஊழல் புகார்கள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த சூரப்பா மீது ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழுவை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 80 சதவிகித விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், சூரப்பாவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், துணைவேந்தர் பணி காரணமாக அரசு இல்லத்தில் தங்கியிருந்த சூரப்பா, ஓய்வு பெற்ற நிலையில், அரசு வீட்டை காலிய செய்ய மறுத்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக மேலும் 2 மாதம் தமிழகத்தில் தங்கியிருக்க வேண்டியதிருப்பதால், அரசு இல்லத்தை 2 மாதங்களுக்கு காலி செய்ய இயலாது என தெரிவித்துள்ளார்.