சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட தொடர்பாக  தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், இன்று  நேரடி விசாரணை மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர சம்பவத்தை செய்தவர் திமுகவை சேர்ந்தவர் என்பது ஆதாரப்பூர்வமாக எதிர்க்கட்சிகளால் நிரூபிக்கப்பட்டு உள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில்  கோட்டூர் புரம்  போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில், அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள், பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக மாணவி  இந்த நிலையில் இந்த வழக்கை மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு விசாரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்த கொடூரமான சம்பவம்  குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த  நிலையில்,  தேசிய மகளிர் ஆணையம் ஏற்கனவே வெளியிட்ட உத்தரவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கொடும் குற்றச் செயலுக்கு வன்மையான கன்னடங்களை தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அவருடன் துணை நிற்கின்றோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்,”எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவினரான ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக அவர்கள் இன்று அண்ணா பல்கலைக்கழகம் வந்துள்ளனர்.

இந்த குழுவினர் அண்ணா பல்கலைக்கழகத்தை சுற்றி பார்க்க இருப்பதுடன், வளாகத்தில்  மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தையும் இன்று  இன்று பார்வையிடுகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் குழுவினர் பேசவும் வாய்ப்பு உள்ளதாகவும் , மேலும் பலரிடம் விசாரணை  நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  அத்துடன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் எவை என்று குழு ஆய்வுசெய்ய உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு ஏற்கனவே விசாரணையை தொடங்கிய நிலையில்,  இன்று தேசிய மகளிர் ஆணையத் தின் உண்மை கண்டறியும் குழுவும் இன்று விசாரணையில் இறங்குகிறது. இதற்காக இந்த குழுவினர் நேற்று இரவே சென்னை வந்தடைந்த நிலையில், விசாரணை முடிந்த பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.