சென்னை: பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டிலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முழு விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

சென்ன அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், கிண்டி வளாக அண்ணா  பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) சராசரி கட்-ஆஃப் 200க்கு 198.90 பெற்று முதலிடம் பிடித்தது.

குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இரண்டாவது இடத்திலும் (196.69),

கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (196.65) வது இடத்திலும்,

சென்னையின் புறநகரில் உள்ள ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி  (எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி) (195.50) 4வது இடத்திலும் உள்ளன.

ஸ்ரீ வெங்கடேஸ் வரா பொறியியல் கல்லூரி 9வது இடத்திலும், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி  மற்றும் , நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா-ஐசிஏஎம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளும் முன்னணியில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பும் கல்லூரிகளின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த கல்லூரிகளை தரவரிசைப்படுத்துவதற்கு கணினி அறிவியல் அடிப்படையாக உள்ளது மற்றும் படிப்பை வழங்காத கல்லூரிகள் பட்டியலில் இடம்பெறவில்லை.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலைப் பார்த்து கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

முழு விவரம் காண கீழே உள்ள பிடிஎஃப் – பைலை டவுன்லோடு செய்தோ, அப்படியே திறந்து பார்த்தோ தெரிந்துகொள்ளலாம். 

COLLEGE_RANKING_BASED_ON_PERCEPTION__2___1_