இந்தியாவின் நெம்பர் 1 பல்கலைக்கழகம் என்ற இடத்தைப் பிடித்தது அண்ணா பல்கலைக்கழகம்.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework – NIRF) இன்று வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் முதல்முறையாக மாநில பல்கலைக்கழங்களின் தரவரிசியை தனியாக அறிவித்துள்ளது.

மாநில பல்கலைக்கழங்களின் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது, 2வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும், 3வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது.

மத்திய அரசுப் கல்வி நிறுவனங்களில் பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி. (IISc) முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் JNU பல்கலைக்கழகமும் 3வது இடத்தில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகமும் பிடித்துள்ளது.

ஏற்கனவே 13 பிரிவுகளில் கல்வி நிறுவனங்களை தரவரிசைப் படுத்திவந்த NIRF இந்த ஆண்டு முதல் மாநில அரசு நிதியில் செயல்படும் பல்கலைக்கழகங்கள், திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மற்றும் திறன் பல்கலைக்கழங்கள் ஆகிய மேலும் 3 பிரிவுகளில் தரவரிசை வெளியிட்டுள்ளது.