சென்னை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்விக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பலகலைக்கழகத்தின் பொறியியல் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்பட்டு வருகின்றன. இத்ற்கான கால அவகாசம் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது.
தற்போது தூத்துக்குடி மாவட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக தென் மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தூத்துக்குடி, நெல்லை, கன்யாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அண்ணா பல்கலைக் கழகம் பொறியியல் கல்விக்கு விண்ணப்பிக்க அறிவித்துள்ள கடைசி தேதியை மேலும் 3 நாட்களுக்க் நீட்டித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் கலந்தாய்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் இந்த நீட்டிப்பு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.