செ்னனை: ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட பேராசியர்களை பணி நீக்கம் செய்யவும், அவர்களை பணியில் அமர்த்திய கல்லூரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது இந்த ஊழலை வெளிக்கொணர்ந்த அறப்போர் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
அறப்போர் இயக்கம் கடந்த ஜூலை மாதம் பல்கலைக்கழக பேராசியர்கள் தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டு மற்றும் முறைகேட்டை வெளிக்கொணர்ந்தது. அதில், தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணிபுரிந்து வந்தை அம்பலப்படுத்தியது.
ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர், ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசியராக பணிபுரிய முடியாது. அப்படி பணிபுரிந்தால் மோசடி என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் கூறுகிறது. கவுரவப் பேராசிரியராக இருந்தால்கூட 2 கல்லூரிகளில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆனால், இவர்கள் எப்படி ஒரே நேரத்தில் 224 கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த முறைகேட்டால் மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது
மோசடியை ஆதாரங்களுடன் அறப்போர் அம்பலப்படுத்திய நிலையில், வேறுவழியின்றி அண்ணா பல்கலைக்கழகம் மோசடி நடந்ததை ஒப்புக் கொண்டது. இதையடுத்து, மாநில அரசு, கவர்னர் என பல தரப்பிலும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நெருக்கடி கொடக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை அறிக்க கோரப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாடு மாநில அரசு மோசடியை விசாரிக்க குழு அமைத்து விசாரணை தொடங்கியது. ஆனால் அந்த விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
மேலும், இந்த விவகாரம் குறித்து மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் வாய் திறக்கவில்லை. மாநில ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் வாய் திறக்க வில்லை. கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லிக கொள்ளும் ஆளுங்கட்சி திமுக வாய் திறக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வாய் திறக்கவில்லை. எங்கள் ஆட்சி வந்தாதான் தமிழ்நாடு பளபளக்கும் என்று மைக் இருக்கும் இடங்களில் எல்லாம் பேட்டி கொடுக்கும் பாஜக வாய் திறக்கவில்லை. இவர்களை எல்லாம் தினசரி சந்திக்கும் பத்திரிக்கையாளர்கள் இது குறித்து கேள்வி கேட்பதில்லை. எப்படிப்பட்ட அவல நிலையில் தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிக்கி இருக்கிறார்கள் பாருங்கள் என அறப்போர் இயக்கம் மீண்டும் கேள்வி எழுப்பியது. இதனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட பேராசியர்களை பணி நீக்கம் செய்யவும், அவர்களை பணியில் அமர்த்திய கல்லூரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான விசாரணையில், தமிழகத்தில் உள்ள சுமார் 1,000 பொறியியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பல பேராிசரியர்கள் பணியாற்றி வநத்தும், அவர்கள் பல கல்லூரிகளில் பணிபுரியும் வகையில் தங்களது அடையாளங்களை போலியாக உருவாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் அவை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் இனிமேல் கல்லூரிகளில் கற்பிப்பதற்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விருப்பங்களை பரிசீலித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.