சென்னை
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அரியர் தேர்வு எழ்த இருதி வாய்ப்பாக சிறப்பு தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் கீழ் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்புகளாக சிறப்பு செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டன.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் சிறப்பு அரியர் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அதாவது 2024 நவம்பர்/டிசம்பர் மாதங்களிலும், 2025 ஏப்ரல்/மே மாதங்களிலும் சிறப்பு அரியர் தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
வரும் நவம்பர்/டிசம்பர் மாத சிறப்பு அரியர் தேர்வுக்கு மாணவர்கள் வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 18-ந்தேதி வரை https://coe1.annauniv.eduஎன்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு தேர்வு கட்டணமாக ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.
தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, தோ்வு மையங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு அரியா் தோ்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகா்கோவில் ஆகிய இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]