சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணாக்கர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில், பிரதமர் மோடி  பட்டங்களை வழங்கினார்.

70ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாட்டின் பிரதமர் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். அவருடன் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஆளுநர் ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்முருகன் கலந்து கொண்டனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு நேற்று மாலை சென்னை வந்தபிரதமர் மோடி, இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் 69 மாணவர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கி, சால் அணிவித்து வரவேற்றார்.. உயர்கல்வித்துறை அமைச்சர் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நினைவு பரிசு வழங்கினார். விழாவில், பொன்முடி வரவேற்புரை ஆற்றிய  நிலையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது உரையை நிறைவு செய்தார்.

அதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா தொடங்கியது. மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார்.

பிரதமர் வருகையையொட்டி, ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி செல்லும் 1 கி.மீட்டர் தூரத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் 22,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வருகையையொட்டி படேல் சாலை, சின்னமலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மேளங்கள் முழங்க பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமருக்கு பாஜக சார்பில் அண்ணா உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.